English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
16 Jul, 2022 | 4:19 pm
Colombo (News 1st) 43,000 மெட்ரிக் தொன் டீசலுடனான கப்பல் இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்ததாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.
நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ள டீசலின் மாதிரி பரிசோதிக்கப்படுவதாக எரிசக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
மேலும் 40,000 மெட்ரிக் தொன் டீசலை ஏற்றிய மற்றுமொரு கப்பல் இன்றிரவு நாட்டை வந்தடையவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனிடையே, தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் பதிவினூடாக அவர் இதனை கூறியுள்ளார்.
ஒரு வாரத்திற்கு தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்ளும் வகையில் குறித்த அனுமதிப்பத்திரம் வழங்கப்படுவதாக அமைச்சர் கூறியுள்ளார்.
தேசிய அடையாள அட்டை இலக்கம், வாகன Chassis இலக்கம் உள்ளிட்ட விடயங்கள் அடங்கிய QR CODE புதிய அனுமதிப்பத்திரத்தில் காணப்படும் என எரிசக்தி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு தேசிய அடையாள அட்டைக்கு, ஒரு வாகனத்திற்கு மாத்திரமே எரிபொருள் விநியோகிக்கும் வகையில் தேசிய அனுமதிப்பத்திரம் விநியோகிக்கப்படுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
இதற்காக fuelpass.gov.lk என்ற இணையத்தள முகவரியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த இணையத்தளத்தினூடாக இன்று முதல் எரிபொருளை பெற்றுக்கொள்ள பதிவு செய்துகொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Introduction to the National Fuel Pass will be held @ 12.30pm. A guaranteed weekly fuel quota will be allocated. 1 Vehicle per 1 NIC, QR code allocated once Vehicle Chassis number & details verified. 2 days of the week according to Last Digit of number plate for fueling with QR. https://t.co/hLMI9Nm5ZF
— Kanchana Wijesekera (@kanchana_wij) July 16, 2022
23 Jul, 2022 | 08:33 PM
25 Jun, 2022 | 06:59 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS