40,000 மெட்ரிக் தொன் டீசலுடன் கப்பல் வரவுள்ளது

40,000 மெட்ரிக் தொன் டீசலுடன் கப்பல் வரவுள்ளது

by Staff Writer 15-07-2022 | 3:33 PM
Colombo (News 1st) டீசல் ஏற்றிய கப்பலொன்று இன்றிரவு நாட்டை வந்தடையவுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்தது. 40,000 மெட்ரிக் தொன் டீசல் குறித்த கப்பலில் கொண்டுவரப்படுவதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் உவைஸ் மொஹமட் குறிப்பிட்டார். இதற்கான கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மேலும் ஒரு தொகை பெட்ரோலும் டீசல் ஏற்றிய சில கப்பல்களும் எதிர்வரும் வாரத்தில் நாட்டை வந்தடையவுள்ளன.