by Bella Dalima 15-07-2022 | 4:37 PM
Colombo (News 1st) முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவும் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸவும் உயர் நீதிமன்றத்தின் அனுமதியின்றி வௌிநாடு செல்ல தடை விதித்து உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
இந்த தடை உத்தரவு எதிர்வரும் 28 ஆம் திகதி வரை அமுலாகும் வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய மற்றும் நீதியரசர்களான புவனேக அலுவிஹாரே, பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட மற்றும் L.T.B. தெஹிதெனிய ஆகிய ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாமினால் இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.