ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரி மாளிகையின் தொல்பொருட்கள் தொடர்பில் ஆய்வு

ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரி மாளிகையின் தொல்பொருட்கள் தொடர்பில் ஆய்வு

ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரி மாளிகையின் தொல்பொருட்கள் தொடர்பில் ஆய்வு

எழுத்தாளர் Staff Writer

15 Jul, 2022 | 3:59 pm

Colombo (News 1st) ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரி மாளிகையின் தொல்பொருள் நினைவுச் சின்னங்களுக்கு ஏற்பட்ட சேதம் தொடர்பில் அறிக்கையொன்றை பெற்றுக்கொள்ள தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் தீர்மானித்துள்ளார்.

இதற்காக விசேட குழுவொன்றை ஈடுபடுத்தவுள்ளதாக தொல்பொருள் பணிப்பாளர் நாயகம், பேராசிரியர் அநுர மனதுங்க தெரிவித்தார்.

ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரி மாளிகையில் இருந்து செயற்பாட்டாளர்கள் வெளியேறியதையடுத்து, அந்த வளாகத்தில் உள்ள தொல்பொருள் நினைவுச்சின்னங்களை கண்காணிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக தொல்பொருள் திணைக்களம் தெரிவித்தது.

ஜனாதிபதி மாளிகையில் இருந்த பிரித்தானிய காலத்தை சேர்ந்த தொல்பொருள் பெறுமதிவாய்ந்த பல ஓவியங்கள் பாதுகாப்பாக அகற்றப்பட்டுள்ளதாக தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்