ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடவுள்ளதாக டலஸ் அழகப்பெரும அறிவிப்பு

ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடவுள்ளதாக டலஸ் அழகப்பெரும அறிவிப்பு

ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடவுள்ளதாக டலஸ் அழகப்பெரும அறிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

15 Jul, 2022 | 3:49 pm

Colombo (News 1st) வெற்றிடமாகியுள்ள நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடவுள்ளதாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

மக்கள் தொடர்பில் சிந்திக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைக் கோருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அறிக்கை ஒன்றின் மூலம் அவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

வளமான எதிர்காலத்திற்காக, சிறந்த அரசியல் கலாசாரத்தை ஸ்தாபிக்கும் வகையில், பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு அமைய தற்போது பதவி வெற்றிடம் ஏற்பட்டுள்ள நிறைவேற்றதிகார ஜனாதிபதி பதவிக்கு தாம் போட்டியிடவுள்ளதாக டலஸ் அழகப்பெரும தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் நிறக் கண்ணாடிகளில் இருந்து விலகி, பொதுமக்களின் நலனுக்காக, பண்பான அரசியல் கலாசாரத்தை இலங்கையில் ஸ்தாபிக்கும் நேர்மையான எண்ணத்தில், ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போதைய பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்காக அனைவரும் இணங்கும் பொருளாதார திட்டத்தை உடனடியாக அமுல்படுத்த வேண்டும் என டலஸ் அழகப்பெரும சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் சட்ட ஆதிக்கத்தை நிலைநாட்டி, இனங்களுக்கிடையில் ஐக்கியத்தை பாதுகாத்து, பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதன் மூலம் தாய் நாட்டை வெற்றிப்பாதையில் கட்டியெழுப்ப முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்