by Bella Dalima 14-07-2022 | 4:27 PM
Colombo (News 1st) நெருக்கடியான இந்த சூழலில் நாட்டு மக்கள் அமைதியாக செயற்படுமாறும் பொதுச்சொத்துகளை சேதப்படுத்துவதையும் வன்முறைகளையும் தவிர்த்துக்கொள்ளுமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நாட்டு மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
அத்துடன், அரசியல் தலைமைகள் கால தாமதமின்றி பாராளுமன்றத்தைக் கூட்டி, அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனநாயக ரீதியல் மேற்கொள்ளப்படும் போராட்டத்தை தீய சக்திகள் பிழையான திசைக்கு கொண்டு செல்வதற்கு மக்கள் ஒருபோதும் இடமளிக்கக்கூடாது எனவும் அதில் சுட்டுக்காட்டப்பட்டுள்ளது.