by Staff Writer 14-07-2022 | 9:05 AM
Colombo (News 1st) டீசலை ஏற்றிய கப்பலொன்று நாளை(15) நாட்டை வந்தடையவுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
நாட்டை வந்தடையவுள்ள குறித்த கப்பலில் 40,000 மெட்ரிக் தொன் டீசல் கொண்டு வரப்படுவதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் உவைஸ் மொஹமட் தெரிவித்தார்.
இதற்கான கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
பெட்ரோல் மற்றும் டீசல் ஏற்றிய மேலும் சில கப்பல்கள் அடுத்த வாரம் நாட்டை வந்தடையவுள்ளதாக தலைவர் உவைஸ் மொஹமட் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், எரிபொருள் நெருக்கடியால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்ற அதேநேரம், IOC நிரப்பு நிலையங்களுக்கு அருகில் தொடர்ந்தும் நீண்ட வரிசைகளில் மக்கள் காத்திருப்பதாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர்கள் குறிப்பிட்டனர்.