மாளிகையிலிருந்து வௌியேறிய போராட்டக்காரர்கள் 

ஜனாதிபதி மாளிகையிலிருந்து போராட்டக்காரர்கள் வௌியேறினர்

by Bella Dalima 14-07-2022 | 3:55 PM
Colombo (News 1st) ஜனாதிபதி மாளிகையை கைப்பற்றிய போராட்டக்காரர்கள் அங்கிருந்து வௌியேறியுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார். ஜூலை 9 ஆம் திகதி இடம்பெற்ற போராட்டத்தின் போது, கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகை போராட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்டது. ஜூலை 9 ஆம் திகதி முதல் இன்று காலை வரை மக்கள் பார்வைக்காக ஜனாதிபதி மாளிகை திறக்கப்பட்டிருந்தது. ஒன்றிணைந்த ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்த போராட்டக்களத்தின் செயற்பாட்டாளர்கள், தாம் கைப்பற்றியுள்ள அரச கட்டடங்களை மீள கையளிக்கவுள்ளதாக தெரிவித்தனர்.