by Bella Dalima 14-07-2022 | 6:08 PM
Colombo (News 1st) ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர, பிரதம நீதியரசருக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
ஜனாதிபதி நாட்டிலிருந்து வௌியேறியுள்ளதால், அரசியலமைப்பின் 37/2 சரத்திற்கு அமைய நடவடிக்கை எடுக்குமாறு குறித்த கடிதத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்கவின் கடந்த கால செயற்பாடுகளை கருத்திற்கொண்டு செயற்பட வேண்டும் எனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.