போராட்டக்காரர்களின் கருத்துகளை கேட்டறிவது மிக முக்கியம் – ஐ.நா செயலாளர் நாயகம்

போராட்டக்காரர்களின் கருத்துகளை கேட்டறிவது மிக முக்கியம் – ஐ.நா செயலாளர் நாயகம்

போராட்டக்காரர்களின் கருத்துகளை கேட்டறிவது மிக முக்கியம் – ஐ.நா செயலாளர் நாயகம்

எழுத்தாளர் Staff Writer

14 Jul, 2022 | 11:31 am

Colombo (News 1st) இலங்கையின் நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரெஸ்(Antonio Guterres) தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற நெருக்கடிக்கான காரணங்களைக் கண்டறிவதுடன், போராட்டக்காரர்களின் கருத்துகளைக் கேட்டறிவதும் மிக முக்கியம் என அவர் ட்விட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அமைதியான மற்றும் ஜனநாயக ரீதியிலான மாற்றத்திற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்துக் கட்சித் தலைவர்களையும் கேட்டுக்கொள்வதாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரெஸ் தமது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்