ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ சிங்கப்பூர் சென்றடைந்தார்

by Bella Dalima 14-07-2022 | 5:58 PM
Colombo (News 1st) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ சற்று நேரத்திற்கு முன்னர் சிங்கப்பூரை சென்றடைந்துள்ளார். கோட்டாபய ராஜபக்ஸவை அழைத்துச்சென்ற விமானம் மாலைத்தீவிலிருந்து சற்று நேரத்திற்கு முன்னர் சிங்கப்பூர் விமான நிலையத்தை சென்றடைந்ததாக AFP செய்தி வௌியிட்டுள்ளது. குறித்த விமனம் தரையிறங்கிய படத்துடன் அந்த செய்தி வௌியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியுடன் அவரின் மனைவி அயோமா ராஜபக்ஸவும் குறித்த விமானத்தில் சிங்கப்பூருக்கு சென்றுள்ளார். தமது நாட்டை கோட்டாபய ராஜபக்ஸ வந்தடைந்துள்ளதாக சிங்கப்பூர் வௌிவிவகார அமைச்சு அறிக்கை ஒன்றை வௌியிட்டு உறுதி செய்துள்ளது. தனிப்பட்ட விஜயம் மேற்கொண்டு கோட்டாபய ராஜபக்ஸ தமது நாட்டிற்கு வருகை தந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமது நாட்டில் அவர் தஞ்சம் கோரவில்லை எனவும் சிங்கப்பூர் வௌிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.