நாளை (15) பாராளுமன்ற சபை அமர்வு நடைபெறாது

ஜனாதிபதியின் இராஜினாமா கடிதம் கிடைத்த பின்னரே பாராளுமன்றத்தை கூட்ட முடியும்: சபாநாயகர் அறிவிப்பு

by Bella Dalima 14-07-2022 | 6:17 PM
Colombo (News 1st) நாளை (15) பாராளுமன்ற சபை அமர்வு நடைபெறாது என சபாநாயகர் அறிவித்துள்ளார். ஜனாதிபதியின் இராஜினாமா கடிதம் இதுவரை கிடைக்காமையால், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே திட்டமிட்டபடி நாளை பாராளுமன்றத்தை கூட்ட முடியாது என சபாநாகர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் இராஜினாமா கடிதம் கிடைத்ததன் பின்னரே அடுத்த பாராளுமன்ற அமர்வு தொடர்பில் அறிவிக்க முடியும் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஏனைய செய்திகள்