அமைதியான அதிகார பரிமாற்றத்தின் மூலமே மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற முடியும் – அமெரிக்க தூதுவர்

அமைதியான அதிகார பரிமாற்றத்தின் மூலமே மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற முடியும் – அமெரிக்க தூதுவர்

அமைதியான அதிகார பரிமாற்றத்தின் மூலமே மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற முடியும் – அமெரிக்க தூதுவர்

எழுத்தாளர் Staff Writer

14 Jul, 2022 | 9:15 am

Colombo (News 1st) நாட்டில் சட்டவாட்சியை உறுதிப்படுத்துமாறு இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் வலியுறுத்தியுள்ளது.

அனைத்து வகையான வன்முறைகளையும் கண்டிப்பதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி ச்சங்(Julie Chung) ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

நீண்ட கால பொருளாதார மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மைக்காக அனைத்து தரப்பினரும் விரைந்து செயற்பட வேண்டும் என அமெரிக்க தூதுவர் வலியுறுத்தியுள்ளார்.

பொறுப்புக்கூறல், வெளிப்படைத்தன்மை, ஜனநாயக நிர்வாகம் மற்றும் சிறந்த எதிர்காலத்திற்கான மக்களின் கோரிக்கைகளை ஜனநாயக மற்றும் அரசியலமைப்பு கட்டமைப்பிற்குள் அமைதியான அதிகாரப் பரிமாற்றத்தின் மூலம் மாத்திரமே அடைய முடியும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்