நாளை காலை 5 மணி வரை நாடளாவிய ரீதியில் ஊரடங்கு

நாளை காலை 5 மணி வரை நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம்

by Staff Writer 13-07-2022 | 10:04 PM
நாளை காலை ஐந்து மணி வரை நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டத்தை பிறப்பித்து அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது. பொது மக்கள் பாதுகாப்பு சட்டம் மற்றும் அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி மேற்கொண்டுள்ள நியமனத்திற்கு அமைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த வர்த்தமானியை வௌியிட்டுள்ளார். இதற்கமைய வீதிகள், ரயில் பாதைகள், பூங்காக்கள், விளையாட்டரங்குகள், வேறு பொது இடங்கள் அல்லது கடற்கரையில் தங்கியிருக்க முடியாது என வர்த்மானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.