ஜனாதிபதியின் இராஜினாமா கடிதம் கிடைத்ததும் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – சபாநாயகர்

ஜனாதிபதியின் இராஜினாமா கடிதம் கிடைத்ததும் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – சபாநாயகர்

ஜனாதிபதியின் இராஜினாமா கடிதம் கிடைத்ததும் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – சபாநாயகர்

எழுத்தாளர் Staff Writer

13 Jul, 2022 | 7:54 am

Colombo (News 1st) இன்றைய தினம்(13) பதவியிலிருந்து விலகவுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் கடந்த 09ஆம் திகதி சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்பிரகாரம் ஜனாதிபதியின் இராஜினாமா குறித்து இன்று(13) சபாநாயகருக்கு அறிவிக்கப்படவுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் நியூஸ்பெஸ்ட் வினவிய போது, ​​ஜனாதிபதி இன்று(13) இராஜினாமா செய்வார் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

இராஜினாமா கடிதம் கிடைத்ததும் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் மேலும் தெரிவித்தார்.

இதனிடையே, ஜனாதிபதி பதவியிலிருந்து விலக வேண்டும் என வலியுறுத்தி ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட போராட்டம், இன்று(13) 96 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்