இன்று (12) நள்ளிரவு முதல் பாண் விலை 20 ரூபாவால் அதிகரிப்பு

by Bella Dalima 12-07-2022 | 3:34 PM
Colombo (News 1st) இன்று (12) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 450 கிராம் நிறையுடைய ஒரு இறாத்தல் பாணின் விலை 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், பாணின் புதிய விலை 190 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலைகளும் 10 ரூபாவால் அதிகரிக்கப்படும் என பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் N.K. ஜயவர்தன தெரிவித்தார்.