Colombo (News 1st) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நாட்டிலிருந்து வௌியேறியதாக சபாநாயகர் தெரிவித்ததாக BBC வௌியிட்டுள்ள செய்தியில், உண்மையில்லை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இந்திய ஊடகமான ANI -ற்கு தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி நாட்டில் இல்லை என தாம் தவறுதலாகவே BBC - ற்கு தெரிவித்ததாக சபாநாயகர் கூறியுள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி நாட்டிலிருந்து வௌியேறியுள்ளதாக வௌியாகும் தகவல்கள் தொடர்பில் ஜனாதிபதி பணிக்குழுவின் உயர் அதிகாரி ஒருவரிடம் வினவிய போது, ஜனாதிபதி இதுவரை நாட்டிலிருந்து வௌியேறவில்லை என உறுதிப்படுத்தினார்.