லிட்ரோ எரிவாயு விலை உயர்வு

லிட்ரோ எரிவாயு விலை உயர்வு

லிட்ரோ எரிவாயு விலை உயர்வு

எழுத்தாளர் Staff Writer

11 Jul, 2022 | 3:16 pm

Colombo (News 1st) 12.5 கிலோகிராம் லிட்ரோ எிரவாயு சிலிண்டரொன்றின் விலை இன்று(11) முதல் 50 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, கொழும்பு மாவட்டத்தில் லிட்ரோ எரிவாயு சிலிண்டரொன்றின் புதிய விலை 4,910 ரூபா ஆகும்.

சுமார் ஒரு மாத கால காலத்தின் பின்னர் லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள் இன்று(11) விநியோகிக்கப்படுகின்றன.

நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ள 3,700 மெட்ரிக் தொன் எரிவாயுவில் 70 வீத விநியோகம், இன்றும்(11) நாளையும்(12) கொழும்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படுமென லிட்ரோ நிறுவனத் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 13ஆம் திகதி புதன்கிழமை முதல் எரிவாயு சிலிண்டர்கள் நாடளாவிய ரீதியில் விநியோகிக்கப்படுமென லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, சுமார் 3,700 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பல் இன்றிரவு(11) நாட்டை வந்தடையுமென அவர் கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்