by Bella Dalima 10-07-2022 | 6:18 PM
Colombo (News 1st) இலங்கையில் நிலவும் அரசியல் சூழ்நிலையை இந்திய தேசிய காங்கிரஸ் கவலையுடன் உற்று கவனித்து வருவதாக கட்சியின் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
பொருளாதார சவால்கள், விலைவாசி உயர்வு, உணவு, எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு ஆகியவை இலங்கை மக்களிடையே பெரும் சிரமங்களையும் துயரங்களையும் ஏற்படுத்தியுள்ளதாக அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நெருக்கடியான தருணத்தில் இலங்கைக்கும் அதன் மக்களுக்கும் நிலைமையை சமாளிக்க முடியும் என காங்கிரஸ் கட்சி நம்புவதாக சோனியா காந்தி கூறியுள்ளார்.
தற்போதைய சூழ்நிலையில் சிரமங்களைக் கையாள்வதில் இலங்கை மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் இந்தியா தொடர்ந்து உதவி செய்யும் என்று தாம் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச சமூகம் இலங்கைக்கு அனைத்து உதவிகளையும் ஆதரவையும் வழங்க வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.