English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
10 Jul, 2022 | 4:34 pm
Colombo (News 1st) நேற்றைய தினம் (09) இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
நாட்டின் சட்டம் மற்றும் அரசியலமைப்பு தொடர்பில் ஊடக நிறுவனங்கள் முன்வைத்திருந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையிலேயே இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் இன்று ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தது.
போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சிலரை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட துப்பாக்கிப்பிரயோகத்தில் ஒரு சிலர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் பின்னர் நேற்று மாலை 5 ஆம் ஒழுங்கை பகுதியில் சிரச, MTV ஊடக வலையமைப்பின் ஊடகவியலாளர்கள் மீது பொலிஸார் மனிதாபிமானமற்ற முறையில் தாக்குதல் நடத்தியதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் இதன்போது சுட்டிக்காட்டினார்.
பிரதமரின் வீட்டுக்கு தீ வைக்கப்பட்டமை அடங்கலாக அனைத்து வன்முறைச் சம்பவங்களையும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வன்மையாகக் கண்டிப்பதாக சங்கத்தின் தலைவர் இன்று ஊடக சந்தப்பில் தெரிவித்தார்.
நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் எந்த வகையிலும் வன்முறைச் சம்பவங்களை அனுமதிக்க முடியாது எனவும் வன்முறைகள் மூலம் நாட்டில் ஸ்திரமற்ற நிலையே ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இவ்வாறான நிலைமைகளால் நாட்டின் பிரஜைகள் மத்தியில் உள்ள ஒற்றுமை சீர்குலையும் என்பதோடு, நாட்டின் பொருளாதார நிலைக்கு பாரிய பாதிப்பு ஏற்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாடு தொடர்பிலான சர்வதேசத்தில் உள்ள நற்பெருக்கு களங்கம் ஏற்படும் என்பதால், இந்த வன்முறைகளுக்கு துணை போக வேண்டாம் எனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
அரசியலமைப்பின் ஏற்பாடுகளுக்கு அமைய, ஜனாதிபதி பதவி விலகுவதாக இருந்தால், ஜனாதிபதி தனது கையொப்பத்துடன் கூடிய இராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் கையளிக்க வேண்டும் என ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் இதன்போது கூறினார்.
அவ்வாறு கையளித்தால் மாத்திரமே ஜனாதிபதி பதவி வெற்றிடமாகும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
அரசியலமைப்பின் பிரகாரம், ஜனாதிபதி பதவி விலகியதும் பிரதமர் பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்படுவார். பிரதமரால் அவ்வாறு செயற்பட முடியாவிட்டால், சபாநாயகர் தற்காலிக ஜனாதிபதியாக பதவியேற்க வேண்டும். அவ்வாறு நியமிக்கப்பட்டதும் ஒரு மாதத்திற்குள், தகைமையுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரை ஜனாதிபதியாக தெரிவு செய்ய பாராளுமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது எனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் குறிப்பிட்டது.
பாராளுமன்றத்தில் ஒரு மாதத்திற்குள் இதற்கான வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். இந்த வாக்கெடுப்பில் வெற்றியீட்டுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் 50 வீதத்திற்கு மேற்பட்ட வாக்குகளை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் 225 உறுப்பினர்களும் வாக்களிப்பார்களாயின், அவர்களில் 113 பேரின் வாக்குகளை பெறுபவரே ஜனாதிபதியாக தெரிவாக முடியும் எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் குறிப்பிட்டார்.
இலங்கையின் வரலாற்றில் ஒரு தடவை மாத்திரமே ஜனாதிபதி பதவி வெற்றிடமானது என்பதை சுட்டிக்காட்டிய அவர், 1993 ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச உயிரிழந்ததை அடுத்தே அந்த நிலைமை ஏற்பட்டதாகக் கூறினார்.
ஜனாதிபதி பதவி விலகுவது முதல் புதிய ஜனாதிபதி நியமனம் வரையான செற்பாடுகளை துரிதமாக மேற்கொள்ளுமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அனைத்து தரப்பினரிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
அத்துடன் ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர் ஆகியோர் காலம் தாழ்த்தாமல் புதிய ஜனாதிபதி தெரிவை பூர்த்தி செய்ய வேண்டும் எனவும், நாட்டின் பாரதூரமான தன்மையை புரிந்துகொண்டு செயற்படுமாறும் இலங்கை சட்டத்தரணிகள் அனைத்து தரப்பினரிடமும் கோரிககை விடுத்துள்ளது.
04 Nov, 2022 | 11:55 AM
24 Jun, 2022 | 07:21 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS