ஜூலை 15 ஆம் திகதி வரை பாடசாலைகளுக்கு விடுமுறை

ஜூலை 15 ஆம் திகதி வரை பாடசாலைகளுக்கு விடுமுறை

by Bella Dalima 10-07-2022 | 6:44 PM
Colombo (News 1st) நாளை (11) முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. கல்வி அதிகாரிகளுக்கு இடையில் ஒன்லைனில் நடைபெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. எரிபொருள் நெருக்கடியினால் தொடர்ந்தும் போக்குவரத்து சிரமங்கள் காணப்படுவதால், மாணவர்களுக்கு விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், எதிர்வரும் 18 ஆம் திகதி திங்கட்கிழமை மீண்டும் பாடசாலை கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.