எரிபொருள் விநியோகத்தை மீள ஆரம்பித்தது லங்கா IOC

எரிபொருள் விநியோகத்தை மீள ஆரம்பித்தது லங்கா IOC

எரிபொருள் விநியோகத்தை மீள ஆரம்பித்தது லங்கா IOC

எழுத்தாளர் Bella Dalima

10 Jul, 2022 | 3:43 pm

Colombo (News 1st) எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கும் நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக லங்கா IOC நிறுவனம் தெரிவித்தது.

அதிகபட்ச செயற்றிறனுடன் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மனோஜ் குப்தா குறிப்பிட்டார்.

இதற்காக, திருகோணமலை முனையத்தின் செயற்பாடுகளை 24 மணித்தியாலங்களும் முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.

நேற்றும் நேற்று முன்தினமும் லங்கா IOC நிறுவனம், தமது எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருளை விநியோகிக்கவில்லை.

திட்டமிடப்பட்ட போராட்டங்களைக் கருத்தில் கொண்டு எரிபொருள் விநியோகத்தை இடைநிறுத்துவதற்கான அறிவுறுத்தல்களைப் பெற்றதாக கடந்த 8 ஆம் திகதி மனோஜ் குப்தா ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், கடந்த நாட்களைப் போன்று, நாட்டின் பல பகுதிகளிலும் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் நீண்ட வரிசைகள் காணப்படுகின்றன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்