அமைதியை பேண ஒத்துழைக்குமாறு மக்களிடம் பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி கோரிக்கை

அமைதியை பேண ஒத்துழைக்குமாறு மக்களிடம் பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி கோரிக்கை

அமைதியை பேண ஒத்துழைக்குமாறு மக்களிடம் பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி கோரிக்கை

எழுத்தாளர் Bella Dalima

10 Jul, 2022 | 3:18 pm

Colombo (News 1st) நாட்டில் அமைதியை பேணுவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

இலங்கை பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரியும் முன்னாள் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா நேற்று இரவு ஊடகங்களுக்கு இந்த அறிவிப்பை வௌியிட்டுள்ளார்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழலுக்கு, அமைதியாகவும் அரசியலமைப்பு ரீதியாகவும் தீர்வு காண்பதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளதாக ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.

இதனால் அமைதியை பேணுவதற்கு முப்படையினர் மற்றும் பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி ஜெனரல் சவேந்திர சில்வா மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்