ஜனாதிபதியாக தொடர்ந்தும் பொறுப்பு வகிக்க முடியுமா?

தொடர்ந்தும் பொறுப்பு வகிக்க முடியுமா: சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதியிடம் கேள்வி

by Bella Dalima 09-07-2022 | 5:14 PM
Colombo (News 1st) இலங்கையின் நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக தொடர்ந்தும் பொறுப்புகளை வகிக்கவும் அதிகாரங்களை செயற்படுத்தவும் முடியுமா என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது. இன்று காலை எதிர்ப்பில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள், ஜனாதிபதி செயலகம் மற்றும் ஜனாதிபதி மாளிகைக்குள் பிரவேசித்ததை அடுத்து ஏற்பட்டுள்ள நிலைமையை கருத்திற்கொண்டு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ளது. பிரதமர், சபாநாயகர், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மையை உடனடியாக உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. மேலும், எதிர்ப்பில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் செயற்படுமாறும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் பொலிஸாரிடமும் முப்படையினரிடமும் கேட்டுக்கொண்டுள்ளது. அத்துடன், ஜனாதிபதி மாளிகை மற்றும் ஜனாதிபதி செயலகம் ஆகியன வரலாற்று சிறப்புமிக்க பகுதிகள் என்பதால், அதனை சேதப்படுத்த வேண்டாம் எனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் போராட்டக்காரர்களைக் கோரியுள்ளது.