by Bella Dalima 09-07-2022 | 8:38 PM
Colombo (News 1st) கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது காயமடைந்த 56 பேர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்களுள் மூவரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
அவர்களில் ஒருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
காயமடைந்தவர்களில் 05 பெண்களும் அடங்குகின்றனர்.
பாதுகாப்பு பிரிவை சேர்ந்த இருவரும் இதன்போது காயமடைந்துள்ளனர்.