யூரியா கப்பல் நாட்டை வந்தடையவுள்ளது

யூரியா கப்பல் நாட்டை வந்தடையவுள்ளது

யூரியா கப்பல் நாட்டை வந்தடையவுள்ளது

எழுத்தாளர் Bella Dalima

09 Jul, 2022 | 2:29 pm

Colombo (News 1st) இந்திய அரசினால் வழங்கப்படும் யூரியாவை ஏற்றிய கப்பல் இன்று (09) நாட்டை வந்தடையவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்திய அரசின் கடன் வசதியின் கீழ் நாட்டிற்கு வழங்கப்பட்டுள்ள 65,000 மெட்ரிக் தொன் யூரியா உரத்தில், முதற்கட்டமாக 40,000 மெட்ரிக் தொன் யூரியா உரத்தை ஏற்றிய கப்பலே இன்று முற்பகல் கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

எஞ்சிய 25,000 மெட்ரிக் தொன் யூரியா உரம், இரண்டாம் கட்டத்தின் கீழ் நாட்டிற்கு கிடைக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.

65,000 மெட்ரிக் தொன் யூரியா உரத்தில் 30,000 மெட்ரிக் தொன் உரத்தை நெற்செய்கைக்கும் 20,000 மெட்ரிக் தொன் உரத்தை சோளச் செய்கைக்கும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

எஞ்சிய உரத்தை கைத்தொழில் அமைச்சின் கோரிக்கைக்கு அமைவாக, தேயிலை செய்கைக்கு வழங்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, யூரியா உரத்தை ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் பகிர்ந்தளிக்கும் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக மாவட்ட செயலாளர்களை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் கூறுனார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்