படகில் அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 67 பேர் கடற்படையினரால் கைது

படகில் அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 67 பேர் கடற்படையினரால் கைது

படகில் அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 67 பேர் கடற்படையினரால் கைது

எழுத்தாளர் Bella Dalima

09 Jul, 2022 | 7:13 pm

Colombo (News 1st) படகு மூலம் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 67 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களுள் 11 சிறுவர்களும் 6 பெண்களும் அடங்குகின்றனர்

அவுஸ்திரேலியாவிற்கு செல்வதற்காக படகில் பயணத்தை ஆரம்பித்த சந்தர்ப்பத்தில் வாழைச்சேனை கடற்பரப்பில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர்.

இவர்களில் படகின் ஓட்டுநரும் மக்களிடம் பணத்தைப் பெற்றுக்கொண்ட முகவரும் தவிர்ந்த ஏனையவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்