நியூஸ்ஃபெஸ்ட் ஊடகவியலாளர்கள் 7 பேர் மீது தாக்குதல்

நியூஸ்ஃபெஸ்ட் ஊடகவியலாளர்கள் 7 பேர் மீது தாக்குதல்

நியூஸ்ஃபெஸ்ட் ஊடகவியலாளர்கள் 7 பேர் மீது தாக்குதல்

எழுத்தாளர் Bella Dalima

09 Jul, 2022 | 7:41 pm

Colombo (News 1st) பிரதமரின் வீட்டின் அருகில் நியூஸ்ஃபெஸ்ட் ஊடகவியலாளர்கள் 7 பேர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் ஊடகவியலாளர்களை தாக்கியுள்ளனர்.

ஜூடின் சிந்துஜன், ஜனித்த மென்டிஸ், வர்ண சம்பத், சரசி பீரிஸ் ஆகிய நியூஸ்ஃபெஸ்ட் ஊடகவியலாளர்கள் மீதே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்களை வைத்தியசாலைக்கு அழைத்து செல்வதற்காக சென்ற நியூஸ்பெஸ்ட்டின் ஏனைய ஊடகவியலாளர்களான காளிமுத்து சந்திரன், சானுக்க வீரகோன் ஆகிய இருவர் மீதும் விசேட அதிரடிப்படையினரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலை மேற்கொள்வதற்கு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ரொமேஷ் லியனகே  கட்டளை வழங்கியுள்ளார்.

இதேவேளை, பலத்த காயங்களுக்குள்ளான ஊடகவியலாளர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.​

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்