ஜூலை 11 ஆம் திகதி முதல் எரிவாயு விநியோகிக்கப்படும்

ஜூலை 11 ஆம் திகதி முதல் எரிவாயு விநியோகிக்கப்படும்: லிட்ரோ தெரிவிப்பு

by Bella Dalima 09-07-2022 | 2:24 PM
Colombo (News 1st) எரிவாயுவை ஏற்றிய கப்பலொன்று இன்று (09) நள்ளிரவு நாட்டை வந்தடையவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்தது. அதில் 3,700 மெட்ரிக் தொன் எரிவாயு அடங்கியுள்ளதாக லிட்ரோ நிறுவன தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்தார். கப்பலில் இருந்து எரிவாயு இறக்கப்பட்டதன் பின்னர், எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் அதனை சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் கூறினார். அத்துடன், எரிவாயுவை ஏற்றிய மற்றுமொரு கப்பல் 11 ஆம் திகதி நாட்டை வந்தடையவுள்ளதாகவும் லிட்ரோ நிறுவனத் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.