பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பேரணியை கலைக்க பொலிஸார் நடவடிக்கை

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பேரணியை கலைக்க பொலிஸார் நடவடிக்கை

எழுத்தாளர் Bella Dalima

08 Jul, 2022 | 6:51 pm

Colombo (News 1st) கொழும்பை வந்தடைந்துள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பேரணி மீது கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாளை (09) நடைபெறவுள்ள மாபெரும் எழுச்சிப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பல்கலைக்கழக மாணவர்களின் எதிர்ப்பு போராட்டம் களனி பல்கலைக்கழகத்திலிருந்து இன்று பகல் ஆரம்பிக்கப்பட்டது.

இவர்கள் கொழும்பு புறக்கோட்டை இலங்கை வங்கி வீதிக்குள் பிரவேசிக்க முயற்சித்த போது, ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்