அரிசியை பயன்படுத்தி திரிபோஷா உற்பத்தி

சோளத்திற்கு பதிலாக அரிசியை பயன்படுத்தி திரிபோஷா உற்பத்தி

by Bella Dalima 08-07-2022 | 4:26 PM
Colombo (News 1st) சோளத்திற்கு பதிலாக அரிசியை பயன்படுத்தி திரிபோஷா உற்பத்தியை ஆரம்பித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சு உள்ளிட்ட அமைச்சுகள் மற்றும் நிறுவனங்கள் பல இணைந்து தயாரித்த அவசர போசாக்கு திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக சுகாதார அமைச்சின் போஷாக்கு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் அனில் சமரநாயக்க தெரிவித்தார். இந்த திட்டத்தின் பிரகாரம் சிறுவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் வயோதிபர்களின் போசாக்குத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு விசேட வேலைத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக டொக்டர் அனில் சமரநாயக்க குறிப்பிட்டார்.