எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இடம்பெற்ற மோதலில் இளைஞர் உயிரிழப்பு

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இடம்பெற்ற மோதலில் இளைஞர் உயிரிழப்பு

எழுத்தாளர் Bella Dalima

08 Jul, 2022 | 10:14 am

Colombo (News 1st) காலி – மாகால்ல பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்றிரவு இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், நால்வர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த நால்வரும் காலி – கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

ஹபராதுவ – யட்டகல பகுதியை சேர்ந்த 25 வயதான இளைஞரே உயிரிழந்துள்ளார்.

நேற்று மாலை 7 மணியளவில் எரிபொருள் வரிசைக்கு வந்த ஒருவர், தமது நண்பரின் கடைக்கு முன்பாக வரிசைக்குள் தனது காருடன் நுழைந்துள்ளார்.

அந்நபர் வாகனத்தை எரிபொருள் நிரப்பு நிலைய வரிசைக்குள் நிறுத்த முற்பட்ட போது, ​​வரிசையின் பின்னால் இருந்த சிலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவருடன் மோதலில் ஈடுபட்டதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்