இன்று (07) ரயில் சேவைகள் வழமைக்கு திரும்புமா?

இன்று (07) ரயில் சேவைகள் வழமைக்கு திரும்புமா?

by Staff Writer 07-07-2022 | 9:14 AM
Colombo (News 1st) ரயில் சேவைகளை இன்றைய தினம்(07) வழமைக்கு கொண்டுவர முடியும் என ரயில்வே திணைக்களம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் பலர், பணிக்கு சமூகமளிக்காத காரணத்தினால் நேற்று(06) பல ரயில் சேவைகள் இரத்துச் செய்யப்பட்டதாக ரயில்வே கட்டுப்பாளர் அதிகார சபை தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், போக்குவரத்து அமைச்சின் அதிகாரிகளுடனான கலந்துரையாடலை அடுத்து ரயில் ஊழியர்களுக்கு எரிபொருளை வழங்குவதற்கான விரைவான திட்டமொன்றை தயாரிப்பதாக உறுதியளித்ததன் பின்னர் ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் மீண்டும் சேவைக்கு சமூகமளிக்க தீர்மானித்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனிடையே, பஸ் சேவைகள் இன்று(07) வழமை போன்று முன்னெடுக்கப்படும் என இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது. எவ்வாறாயினும், இன்றும் தனியார் பஸ்களை உரிய முறையில் சேவையில் ஈடுபடுத்த முடியவில்லை என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.