மட்டக்களப்பு – சந்திவௌி பகுதியில் ஒருவர் வெட்டி கொலை

மட்டக்களப்பு – சந்திவௌி பகுதியில் ஒருவர் வெட்டி கொலை

மட்டக்களப்பு – சந்திவௌி பகுதியில் ஒருவர் வெட்டி கொலை

எழுத்தாளர் Staff Writer

07 Jul, 2022 | 1:51 pm

Colombo (News 1st) மட்டக்களப்பு – சந்திவௌி பகுதியில் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

தமது உறவினர்களால் நேற்றிரவு(06) குறித்த நபர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

சந்திவௌி பிரதான வீதி பகுதியை சேர்ந்த 38 வயதான ஒருவரே இவ்வாறு வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.

நீதவான் விசாரணைகளின் பின்னர் சடலத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த நபரை தாக்கிய போது காயமடைந்த மூவரும் கைது செய்யப்பட்டு, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

2 ஆண்களும் பெண்ணொருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொலை செய்யப்பட்டவரின் மனைவியின் உறவினர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சந்திவௌி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்