பொலிஸ்மா அதிபர் விடுத்துள்ள அறிவிப்பு

பொலிஸ்மா அதிபர் விடுத்துள்ள அறிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

07 Jul, 2022 | 7:19 pm

Colombo (News 1st) அமைதியான முறையில் எதிர்ப்பில் ஈடுபடும் உரிமைக்கு பொலிஸார் எவ்வித தடையும் விதிக்க மாட்டார்கள் என பொலிஸ்மா அதிபர் C.D.விக்ரமரத்ன தெரிவித்தார்.

பொலிஸ்மா அதிபர் இது தொடர்பாக இன்று விசேட அறிவிப்பொன்றை விடுத்தார்.

அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள பேச்சு , கருத்து சுதந்திரம், அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்குள்ள உரிமைக்கு இலங்கை பொலிஸார் அனைத்து சந்தர்ப்பங்களிலும் மதிப்பளிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

நாட்டிலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் உள்ள அதிகாரிகளுக்கு இது தொடர்பாக பொலிஸ் தலைமையகம் அவ்வப்போது தொடர்ச்சியான ஆலோசனைகளை வழங்கி வருவதாகவும் அவர் கூறினார்.

அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள உரிமைகளை அனுபவிக்கும் போது, ஏனையவர்களின் உரிமைகள் பாதிக்கப்படாதவாறு செயற்பட வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளதாக பொலிஸ்மா அதிபர் சுட்டிக்காட்டினார்.

சட்டங்களை மீறும் வகையிலும் அமைதிக்கு குந்தகம் ஏற்படும் வகையிலும் வன்முறையைத் தூண்டும் வகையிலும் செயற்பட்டு அரச மற்றும் தனியார் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தால், பொலிஸ் உத்தியோகத்தர்களால் பொறுமை காக்க முடியாது எனவும் பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார்.

ஆகவே, அரச மற்றும் தனியார் சொத்துகளுக்கு சேதம் விளைவிக்காது, கடமையில் உள்ள ஊழியர்களுக்கு இடையூறு விளைவிக்காது, சட்ட வரையறைக்குள் எதிர்ப்பினை முன்னெடுக்குமாறு அவர் கோரிக்கை விடுத்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்