சட்டவிரோதமாக இந்தியா செல்ல முயன்ற 10 பேர் தலைமன்னாரில் கைது

சட்டவிரோதமாக இந்தியா செல்ல முயன்ற 10 பேர் தலைமன்னாரில் கைது

எழுத்தாளர் Bella Dalima

07 Jul, 2022 | 3:33 pm

Colombo (News 1st) சட்டவிரோதமாக இந்தியா செல்ல முயற்சித்த 10 பேர் தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

09 மாத குழந்தையும் 1 வயது மற்றும் 7 வயதான இருவரும் 3 பெண்களும் 4 ஆண்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டுள்ளவர்கள் தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்