கொழும்பின் பல பகுதிகளில் நீர் விநியோகம் தடை

கொழும்பின் பல பகுதிகளில் நீர் விநியோகம் தடை

கொழும்பின் பல பகுதிகளில் நீர் விநியோகம் தடை

எழுத்தாளர் Staff Writer

07 Jul, 2022 | 11:32 am

Colombo (News 1st) கொழும்பு 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கான நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது.

அத்துடன், கொழும்பு – 1 பகுதிக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படுவதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

பிரதான விநியோக கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள கசிவு காரணமாக நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாகவும் அதனை சீர்செய்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், நாளை(08) காலை 06 மணியளவில் நீர் விநியோகம் வழமைக்கு கொண்டுவரப்படும் என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்