தொழிற்சங்க உறுப்பினர்களின் பேரணி மீது நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம்

தொழிற்சங்க உறுப்பினர்களின் பேரணி மீது நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம்

எழுத்தாளர் Bella Dalima

06 Jul, 2022 | 7:54 pm

Colombo (News 1st) சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை மீண்டும் செயற்படுத்துமாறு கோரி பாராளுமன்ற கட்டடத் தொகுதி நோக்கி இன்று பேரணியொன்றை நடத்திய தொழிற்சங்க உறுப்பினர்கள் மீது நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

பாராளுமன்றத்தை நோக்கி பேரணி முன்னெடுப்பதற்கு முன்னதாக அவர்கள் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு முன்பாக எதிர்ப்பில் ஈடுபட்டதுடன், பியகம மக்கள் இதற்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்