கந்தக்காடு சம்பவத்தின் விசாரணை அறிக்கையில் தாமதம்

கந்தக்காடு சம்பவத்தின் விசாரணை அறிக்கையில் தாமதம்

கந்தக்காடு சம்பவத்தின் விசாரணை அறிக்கையில் தாமதம்

எழுத்தாளர் Staff Writer

06 Jul, 2022 | 11:43 am

Colombo (News 1st) கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் இடம்பெற்ற சம்பவத்தில் கைதியொருவர் உயிரிழந்தமை தொடர்பில் இடம்பெறும் விசாரணை அறிக்கை மேலும் 2 தினங்களுக்கு தாமதமாகும் என புனர்வாழ்வு நிலைய ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் சில கைதிகளிடம் வாக்குமூலம் பெறவேண்டியிருப்பதன் காரணமாக அறிக்கையை வழங்குவதற்கு அதன் உறுப்பினர்கள் கால அவகாசம் கோரியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய, குறித்த அறிக்கை வெள்ளிக்கிழமை தமக்கு கிடைத்தவுடன் அதேநாளில் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் விஜேதாச ராஜபக்ஸவிடம் கையளிக்கவுள்ளதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள இராணுவ மற்றும் விமானப்படை உறுப்பினர்கள் நால்வரும் எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் உயிரிழந்த கைதியின் பிரேத பரிசோதனை பொலன்னறுவை வைத்தியசாலையில் நேற்று(05) முன்னெடுக்கப்பட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்