எரிபொருள் நெருக்கடியால் ரயில் சேவைகள் பாதிப்பு

எரிபொருள் நெருக்கடியால் ரயில் சேவைகள் பாதிப்பு

by Staff Writer 06-07-2022 | 9:14 AM
Colombo (News 1st) 26 அலுவலக ரயில் சேவைகள் மாத்திரம் இன்று(06) முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. எரிபொருள் நெருக்கடி காரணமாக ஊழியர்கள் சேவைக்கு சமூகமளிக்காமையால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே பிரதி பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார். எனினும், முன்பதிவு செய்யப்பட்ட ரயில் சேவைகள் உரிய முறையில் முன்னெடுக்கப்படும் என  அவர் குறிப்பிட்டுள்ளார்.