by Staff Writer 05-07-2022 | 7:04 AM
Colombo (News 1st) அமெரிக்காவின் சிகாகோ நகரில் இடம்பெற்ற அணிவகுப்பில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூடு தொடர்பில் 22 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவத்தில் குறைந்தது 24 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அணிவகுப்பு ஆரம்பமாகி சில நிமிடங்களில் குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் 24 ஆம் திகதி டெக்சாஸில் பாடசாலையொன்றில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் 19 மாணவர்கள் உட்பட 21 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.