போப் பிரான்சிஸ் ஓய்வு பெறுகிறாரா?

போப் பிரான்சிஸ் ஓய்வு பெறுகிறாரா?

போப் பிரான்சிஸ் ஓய்வு பெறுகிறாரா?

எழுத்தாளர் Bella Dalima

05 Jul, 2022 | 3:55 pm

Colombo (News 1st) ஓய்வு பெறப்போவதாக பரவிய செய்தியை போப் ஃபிரான்சிஸ் மறுத்துள்ளாா்.

விரைவில் ரஷ்யா, உக்ரைனுக்கு செல்லவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

போப் ஃபிரான்சிஸ் முழங்கால் வலிக்கு சிகிச்சை பெற்று வருகிறாா். இந்நிலையில், அவா் எந்த நேரமும் ஓய்வு பெறும் அறிவிப்பை வெளியிடக்கூடும் என வதந்தி பரவியது.

எனினும், Reuters செய்தி நிறுவனத்திற்கு வழங்கிய நேர்காணலில் இத்தகவலை போப் மறுத்துள்ளார்.

”ஓய்வு பெறும் அறிவிப்பை வெளியிடும் எந்த யோசனையும் இல்லை. முழங்கால் வலி காரணமாக சக்கர நாற்காலியை ஒரு மாதமாக பயன்படுத்தி வருகிறேன். மெதுவாக குணமடைந்து வருகிறேன்,” என போப் கூறியுள்ளார்.

இந்த வார இறுதியில் காங்கோ மற்றும் தெற்கு சூடானுக்கு போப் ஃபிரான்சிஸ் பயணம் மேற்கொள்வதாக இருந்தாா். ஆனால், மருத்துவர்களின் ஆலோசனைப்படி அந்த பயணத்திட்டம் இரத்து செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும், கனடாவிற்கு எதிர்வரும் 24 ஆம் திகதி செல்லப்போவதாகத் தெரிவித்த போப், அதன் பின்னா் ரஷ்யா, உக்ரைனுக்கு செல்லவிருப்பதாகவும் நம்பிக்கை வௌியிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்