தமிழகத்தில் தஞ்சமடைந்த மேலும் 8 பேர்

தமிழகத்தில் தஞ்சமடைந்த மேலும் 8 பேர்

எழுத்தாளர் Staff Writer

05 Jul, 2022 | 12:52 pm

Colombo (News 1st) நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியினால் இந்தியாவில் தஞ்சமடைபவர்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்த வண்ணமுள்ளது.

இந்த நிலையில், யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறை பகுதியைச் சேர்ந்த 8 பேர் தமிழகத்தின் தனுஷ்கோடிக்கு கடல் மார்க்கமாக சென்றுள்ளனர்.

இந்திய கரையோர பொலிஸாரின் விசாரணைகளின் பின்னர் இவர்கள் மண்டபம் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.

நாட்டில் நிலவும் பொருளாதார நெருடிக்கடியினால் கடந்த 4 மாத காலத்தில் மாத்திரம் 103 பேர் தமிழகத்தில் தஞ்மடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்