எரிபொருள் வரிசையில் 14 ஆவது மரணம் பதிவு

எரிபொருள் வரிசையில் 14 ஆவது மரணம் பதிவு

எழுத்தாளர் Bella Dalima

05 Jul, 2022 | 4:24 pm

Colombo (News 1st) கொழும்பு பொரளையில் எரிபொருள் வரிசையில் காத்திருந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

எரிபொருள் வரிசைகளில் இடம்பெற்ற மரணங்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.

பொரளையில் உள்ள LIOC எரிபொருள் நிரப்பு நிலையத்தில், எரிபொருள் பெற வரிசையில் காத்திருந்த 60 வயதான நபர் ஒருவர் தனது காரில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

எரிபொருள் வரிசையில் இருந்த ஏனையவர்களின் கூற்றுப்படி, இறந்தவர் காலையில் எரிபொருள் வரிசையில் இணைந்துகொண்டுள்ளதுடன், இரண்டு மணித்தியாலங்கள் வரையில் காத்திருந்த போது உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் அங்கொடையை சேர்ந்த 60 வயதான M.D.S.D.குணரத்ன அடையாளம் காணப்பட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்