47 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்களுடன் ஒருவர் கைது 

47 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்களுடன் ஒருவர் கைது 

47 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்களுடன் ஒருவர் கைது 

எழுத்தாளர் Bella Dalima

02 Jul, 2022 | 4:14 pm

Colombo (News 1st) சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 47 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கம், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

துபாயில் இருந்து தங்கத்தை கொண்டு வந்த நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப்பேச்சாளர் சுதத் சில்வா தெரிவித்தார்.

தெமட்டகொட பிரதேசத்தை சேர்ந்த 35 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 20 தங்க பிஸ்கட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்