மூன்று மாவட்ட அலுவலகங்களில் ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டுகள் விநியோகம் 

மூன்று மாவட்ட அலுவலகங்களில் ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டுகள் விநியோகம் 

மூன்று மாவட்ட அலுவலகங்களில் ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டுகள் விநியோகம் 

எழுத்தாளர் Bella Dalima

02 Jul, 2022 | 5:03 pm

Colombo (News 1st) மாத்தறை, கண்டி மற்றும் வவுனியா மாவட்டங்களில் உள்ள குடிவரவு குடியகல்வு திணைக்கள அலுவலகங்களில் எதிர்வரும் திங்கட்கிழமை (04) முதல் ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டுகள் வழங்கப்படவுள்ளன.

ஒரு நாள் சேவை தற்போது கொழும்பிலுள்ள குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினூடாக மாத்திரமே முன்னெடுக்கப்படுகின்றது.

திகதி மற்றும் நேரத்தை முற்பதிவு செய்ததன் பின்னர் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வவுனியா, மாத்தறை மற்றும் கண்டி மாவட்ட அலுவலகங்களில் ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டு பெற்றுக்கொள்ள முடியும் என குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் சரத் ரூபசிறி தெரிவித்தார்.

ஒரு நாள் சேவையின் ஊடாக கடவுச்சீட்டு பெறுவதற்கு நாளாந்தம் 3000 பேர் கொழும்பிற்கு வருகை தருவதாக அவர் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்