ஜூலை 15 ஆம் திகதிக்கு முன்னர் எரிவாயு கப்பல்கள் வரவுள்ளதாக லங்கா IOC தெரிவிப்பு

ஜூலை 15 ஆம் திகதிக்கு முன்னர் எரிவாயு கப்பல்கள் வரவுள்ளதாக லங்கா IOC தெரிவிப்பு

ஜூலை 15 ஆம் திகதிக்கு முன்னர் எரிவாயு கப்பல்கள் வரவுள்ளதாக லங்கா IOC தெரிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

02 Jul, 2022 | 4:46 pm

Colombo (News 1st) எதிர்வரும் ஆகஸ்ட் 15 ஆம் திகதிக்கு முன்னர் மூன்று டீசல் மற்றும் பெட்ரோல் கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளதாக லங்கா IOC நிறுவனம் தெரிவித்தது.

இந்த கப்பல்கள் எதிர்வரும் 13 மற்றும் 14 ஆம் திகதிகளிலும் 29 மற்றும் 30 ஆம் திகதிகளிலும் ஆகஸ்ட் மாதம் 10 மற்றும் 15 ஆம் திகதிகளிலும் நாட்டை வந்தடையவுள்ளதாக லங்கா IOC நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மனோஜ் குப்தா தெரிவித்தார்.

இதேவேளை, எதிர்வரும் 10 அல்லது 11 ஆம் திகதிகளில் டீசல் ஏற்றிய கப்பலொன்று நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் உவைஸ் மொஹமட் குறிப்பிட்டார்.

எதிர்வரும் 20 ஆம் திகதி நாட்டிற்கு வருகை தரவுள்ள பெட்ரோல் கப்பலை எதிர்வரும் 10 ஆம் திகதியளவில் நாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

அத்தியாவசிய சேவைகளுக்கு முன்னுரிமை அளித்து, லங்கா IOC எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் வழங்கப்படுகிறது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்