எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ஏற்படும் அமைதியின்மையை கட்டுப்படுத்தவுள்ள STF 

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ஏற்படும் அமைதியின்மையை கட்டுப்படுத்தவுள்ள STF 

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ஏற்படும் அமைதியின்மையை கட்டுப்படுத்தவுள்ள STF 

எழுத்தாளர் Bella Dalima

02 Jul, 2022 | 5:30 pm

Colombo (News 1st) எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் ஏற்படும் அமைதியின்மையை கட்டுப்படுத்த பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF ) ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

அமைதியின்மையில் ஈடுபடுவோர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டு, சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

இதேவேளை, பொலிஸ் உத்தியோகத்தர்களுக்காக 4000 சைக்கிள்களை வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

தற்போதைய எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், பொலிஸாரின் கடமைகளை இலகுவாக்கும் நோக்கில் இந்த திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் நெருக்கடி காரணமாக சில விசாரணைகள் மற்றும் களப்பணிகள் தடைப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இத்தகைய நிலைமையை கட்டுப்படுத்தும் வகையில், இந்த திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்