அத்தியாவசிய சேவைக்கு மாத்திரமே எரிவாயு விநியோகம்

அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரமே எரிவாயு விநியோகிக்கப்படும்: லிட்ரோ தெரிவிப்பு

by Bella Dalima 02-07-2022 | 4:07 PM
Colombo (News 1st) அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரமே எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 7ஆம் திகதி வரை வீட்டுத்தேவைக்கான எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட மாட்டாது என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் குறிப்பிட்டார். இம்மாதம் 33,000 மெட்ரிக் தொன் எரிவாயுவை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். எரிவாயுவை ஏற்றிய முதல் கப்பல் எதிர்வரும் 6 ஆம் திகதி நாட்டை வந்தடையவுள்ளது.