ரெட்டா உள்ளிட்ட மூவருக்கு பிணை

ரெட்டா உள்ளிட்ட மூவருக்கு பிணை

ரெட்டா உள்ளிட்ட மூவருக்கு பிணை

எழுத்தாளர் Bella Dalima

01 Jul, 2022 | 5:48 pm

​Colombo (News 1st) ரெட்டா என்றழைக்கப்படும் ரந்தித்து சேனாரத்ன, லஹிரு வீரசேகர மற்றும் ரத்கரவ்வே ஜினரத்ன தேரர் ஆகிய மூன்று பேருக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் நகர்த்தல் பத்திரம் ஒன்றை தாக்கல் செய்த போது, இவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் செல்ல சந்தேகநபர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

இவர்களுக்கு எதிரான முறைப்பாட்டை எதிர்வரும் 06 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் கொழும்பிலுள்ள பொலிஸ் தலைமையகத்திற்கு அருகில் அமைதியின்னை ஏற்படும் வகையில் செயற்பட்டு, பொது சொத்துகளை சேதப்படுத்தியதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்ட இவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்